நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட்!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
நித்தியானந்தா

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நித்தியானந்தா

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலியல் வழக்கில் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கிறேன் என்றார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

court order

வழக்கு விசாரணைக்கு வராமல் கைலாசா தீவில் தலைமறைவாக இருக்கும் நித்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கைலாசா தீவுக்கு வழி தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி  போயுள்ளனர். முதற்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்திக்கு பிடிவாரண்ட் உத்தரவு நகலை போலீசார் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web