இன்று ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!!

 
ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் நீதிபதி  ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பல முக்கிய திருப்பங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மொத்தம் 14 முறை கால அவகாசம் கோரப்பட்டது. 

ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து மொத்தம்  158 பேரிடம் விசாரணை நடத்தியது. அதிலும் முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்பட ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.இதற்கிடையில் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதன் தொடர்ச்சியாக இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்ததால், 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

ஆறுமுகசாமி

அதன்பின் எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் மீண்டும் அனுமதி வழங்கியது. அதன்படி நியமிக்கப்பட்ட மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட மருத்துவக்குழுவின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் தனது இறுதி அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க கடந்த 22ம் தேதி நேரம் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டது. ஆனால் பணி சுமைகள் காரணமாக முதல்வரால் நேரம் ஒதுக்கக முடியவில்லை. எனவே அறிக்கை சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டது.

ஆறுமுகசாமி
இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஆறுமுகசாமி தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்த மொத்த விவரங்களும் வெளிச்சத்திற்கு வரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web