நாளை ஆசியக் கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் துவக்கம்! இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எகிறும் எதிர்பார்ப்பு! முழு அட்டவணை!

 
ரோகித் சர்மா கிரிக்கெட்

நாளை எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இப்போதே ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துபாயில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கான பலப்பரீட்சை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இன்று துபாயில் உள்ள எமிரேட்சில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் மோதுகின்றன.

துபாயில் நடக்கும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (28ம் தேதி) துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்பதால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்  இந்திய கிரிக்கெட்

கடந்த டி-20 உலக கோப்பை தொடரின் முதல் மோதலில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த. பின் அரையிறுதி வாய்ப்பையும் இழந்து பெவிலியன் திரும்பியது. இதனால் இரு அணிகள் மோதல் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ராகுல், ஹர்திக், தினேஷ் கார்த்திக், ரிஷாப் உள்ளிட்ட வீரர்கள் களம் காண்கிறார்கள். மேலும் வீராட் கோலி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை கோலி தனது அபாரமான விளையாட்டை வெளிப்படுத்துவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கோலி மீண்டும் ஏமாற்றும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணி வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் தீபக் சாஹர் சூர்யகுமார்

இந்திய& பாகிஸ்தான் போட்டி குறித்து நியூசிலாந்து அணி முன்னாள் ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறும்போது, ‘‘தற்போதைய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பகர் ஜமான் என 'டாப்-3' வீரர்களை மட்டும் தான் நம்பி களம் இறங்குகிறது. போட்டியின் தொடக்கத்திலேயே இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது  இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். மேலும் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை நம்பினால், அது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும்.

பாகிஸ்தானின் துவக்க ஜோடியை பிரிப்பது இந்தியாவும் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. மிடில் ஆர்டர் வீரர்களை கட்டுப்படுத்தினால் இந்தியாவுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஆசிய கோப்பை தொடரில் மோதும் 6 அணிகளில், 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் களம் காண்கின்றன.

லீக் முறையில் தொடங்கும் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதிபெறும். இதில் 4 அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பின்னர் டாப்-2 இடம் பெறும் அணிகள், வருகிற செப். 11ல் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் மோதும்.

கிரிக்கெட் போட்டி தொடர் அனைத்தும் போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவங்கும். அதன் அட்டவணை உங்கள் பார்வைக்காக 

நாளை (27ம் தேதி) 'பி' பிரிவில் இலங்கை& -ஆப்கன் துபாய், 28ம் தேதி 'ஏ' பிரிவில் இந்தியா& -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. (இடம் துபாய்)

30ம் தேதி 'பி' பிரிவில ஆப்கன்-&வங்கதேசம் (இடம் சார்ஜா)

31ம் தேதி 'ஏ' பிரிவில் இந்தியா&-ஹாங்காங் (துபாய்) செப்டம்பர் 1 'பி'பிரிவில் இலங்கை-& வங்கதேசம் (துபாய்), செப். 2 'ஏ' பிரிவில் பாகிஸ்தான்& -ஹாங்காங் (சார்ஜா), செப்., 3 முதல்

செப். 9 வரையிலான 'சூப்பர்-4' சுற்று போட்டிகள் நடைபெறுகிறது.

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

.

From around the web