ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி… இந்திய வீராங்கனை மணிகா பத்ரா சாதனை…

 
மணிகா பத்ரா

பாங்காக்-கில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா. ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது.

மணிகா பத்ரா

இந்த தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சென் சூ-யு-வை எதிர் கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மணிகா 4-3 (8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9 செட் கணக்கு ) என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மணிகா பத்ரா

இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அரையிறுதி போட்டியில் கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையேயான போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனையுடன் இந்திய விராங்கனை மணிகா மோத உள்ளார். இதனால் ரசிகர்களியே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

From around the web