அடேங்கப்பா!! சைக்கிள் போட்டியில ஜெயிச்சா ரூ1லட்சம்!!

 
சைக்கிள் போட்டி

நேற்று செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அம்மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கி வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி கௌரவித்தார்.

அறிஞர் அண்ணா

நேற்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான சைக்கிள் போட்டியை ராமநாதபுரத்தில்  மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டி கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலையில் நடைபெற்றது.இந்த சைக்கிள் போட்டிக்கு அம்மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் மொத்தம் 3 பிரிவுகளின் அடிப்படையில் 13, 15, 17வயது ஆண்கள், பெண்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில், முதலிடம் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதற்கு அடுத்தபடியாக 2-ம் இடம் பெற்றவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றும், 3-ம் இடம் பெற்றவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு தொகை மற்றும் பாராட்டுச்சான்றும் வழங்கப்பட்டது.

ஸ்டாலின்

பின்னர் 4 முதல் 10-வது இடம் வரை வந்த போட்டியாளர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும் பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது. மொத்தத்தில் 60 பேருக்கு ரூ.1 லட்சம் வரையில் பரிசுத் தொகையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கி கௌரவித்தார்.மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web