அட்ரா சக்க!! மின்சார வாகனங்கள் வாங்க முன்பணம்!! அதிரடி உத்தரவு!!

 
மின்சார பைக்

இன்றைய வாழ்க்கை முறையில் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்கு செல்லக்கூட சக்கரங்களில் பயணிக்கத் தொடங்கி விட்டனர்.  கால்களில் சக்கரங்களை கட்டிக் கொண்டு பறக்கும் மனிதர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு உடலில் நோய்கள் வந்ததும் வாக்கிங் என்ற பெயரில் மருத்துவர் அறிவுறுத்தும் போது தான் நடையே மீண்டும் ஞாபகத்திற்கு வருகிறது. அலுவலகம் செல்பவர்கள் குறித்து கேட்கவே தேவையில்லை. பின்னிரவு வரை மொபைல்களில் தூக்கத்தை தொலைத்து விட்டு காலை அவசரகதியில் கிளம்பி வாகனங்களில் பயணித்து அலுவலகம் செல்லத் தொடங்கிவிட்டனர்.

அரசு அலுவலகம்

இவர்களின் பயணநேரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்களில்  பணிபுரியும் ஊழியர்களுக்கு  2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வாங்க முன்பணம் வழங்கும் உத்தரவு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. ஊழியர்களின் பணிநிலைக்கு ஏற்ப இந்த முன்பணத்தின் அளவு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில்  தமிழக அரசில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் 6 முதல் 14 லட்சம் ரூபாய் வரை முன்பணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  வாகனச் சந்தைகள் நாளுக்கு நாள் விரிவாக்கம் பெற்று வரும் நிலையில் நாளும் புதுப்புது வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

private office

அத்துடன் மின்சார வாகனங்களும் அதிக அளவு பிரபலம் அடைந்துள்ளன. இந்த வாகனங்களைப் பெறவும் அரசு ஊழியா்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மின்சார வாகனங்களின் பயன்பாட்டால் காா்பன்டை-ஆக்சைடு வாயுவும் குறையும் நிலை ஏற்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வசதியாக அதற்கும் முன்பணத் தொகை வழங்க போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று, தமிழக அரசு ஊழியர்களும் மின்சார வாகனங்களை வாங்க முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web