அட்ரா சக்க!! விமானப் பயணத்தில் முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி!!

 
விமானப்பயணிகள்


கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது. இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் இவைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. தடுப்பூசிகள் மூலம் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதன் அடிப்படையில் விமான போக்குவரத்து அமைச்சகம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

விமானப்பயணிகள்

அதன்படி விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. இந்த உத்தரவு சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச, உள்ளூர் விமானங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானப்பயணிகள்
விமான பயணிகள் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்தின் அடிப்படைய பொறுத்தது.  அதே நேரத்தில்  சில நாடுகளில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்து பயணிகளும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதே  சிறந்தது எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!


 

From around the web