அட்ராசக்க!! தனியார் ராக்கெட்டிலிருந்து வெளியான அசத்தல் வீடியோ!!

 
தனியார் ராக்கெட்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ  ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வருகிறது.  இங்கு அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவின் முதல் தனியார் தயாரிப்பு ராக்கெட்   நவம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

தனியார் ராக்கெட்

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் 'விக்ரம்-எஸ்' என்ற இந்த ராக்கெட்டை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராக்கெட்டிற்கு  'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கேட் 83 கிலோ எடையை தூக்கி செல்லும் வலிமை வாய்ந்தது.  



இந்த ராக்கெட் மூலம் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள் உட்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.  இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம்  பூமியில் இருந்து தகவல்களை திரட்டமுடியும் என  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டில்  கேமராவை இணைத்துள்ளது. அந்த கேமராவில் பதிவான வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. . ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ, ராக்கெட் புறப்படும்போது பூமியின் காட்சியை தெளிவாக படம் பிடித்து  காட்டுகிறது. விக்ரம் - எஸ், இந்தியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இது தான். மேலும் விண்வெளித் துறையில் இந்தியாவிற்கு ஒரு 'புதிய மைல்கல்' ஆக இந்த சாதனை அமைந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web