அட்ராசக்க!! மோடிக்கு சல்யூட் அடித்த ஜோபைடன்!! அமர்ந்தபடியே ஹாய் சொன்ன மோடி!!

 
மோடி பைடன்

இந்தோனேசியாவில்  பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நவம்பர் 15ம் தேதி நேற்று தொடங்கி இன்றும் நீடித்தது.  2 நாட்கள் நடைபெற்ற  இந்த உச்சி மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட  உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்திருந்தனர்.

ஜி20

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா  அதிபர் புதின் மட்டும் வருகை தரவில்லை. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு இந்தோனேஷிய அதிபர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார். உலக தலைவர்கள் அனைவரும் பாலிநகரில் உள்ள மாங்குரோவ் காட்டுக்கு விசிட் செய்தனர். அனைத்து நாட்டு தலைவர்களும் தனித்தனி இருக்கைகளில் அமர்ந்திருந்தினர். அதே போல் மோடியும் அருகில் இருந்த மற்றொரு தலைவருடன் பேசிக்கொண்டிருந்தார்.


அந்த சமயத்தில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்தார். இந்திய பிரதமர் மோடியை பார்த்ததும் ஜோ பைடன் புன்னகைத்து சல்யூட் செய்தார். மோடி இருக்கையில் அமர்ந்தபடியே பைடனுக்கு கையை உயர்த்தி ஹாய் என தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாநாட்டின் தலைமை பதவியை 2023ல் இந்தியா ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web