பாஜக எம்பி வீடு மீது தாக்குதல்!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
தாக்குதல்

தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதி பா.ஜ.க. எம்.பி. அரவிந்த் தர்மபுரி. இவரது வீட்டின் மீது நேற்று  மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து டுவிட்டரில்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த குண்டர்கள், சந்திரசேகரராவ், அவரது மகன் ராமராவ் மற்றும் மகள் கவிதா இவர்களின் உத்தரவின் பேரில், ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல்

வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். எனது தாயாரையும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். வீட்டை சூறையாடி விட்டதுடன்  எனது தாயாருக்கும் மிரட்டல் விடுத்து சென்றனர். தெலுங்கானா முதல்வரின்  மகளான கவிதாவை தாக்கி பேசியுள்ளார். காங்கிரசில் இணையும்படி கவிதாவிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். ஒட்டுமொத்த நாடும் கேலி செய்யும் வகையில் முதல்வரையே தாக்கி பேசியுள்ளார்.

தாக்குதல்

கே.டி.ராமராவ், தனது சகோதரியை இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி. பேசும்போது, கவிதாவை வாங்கி நாங்கள் என்ன செய்ய போகிறோம் ராமராவ்?? கவிதாவை வாங்கி வர்த்தகம் செய்யும் கட்சி ஒன்றும் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில், எம்.பி.யின் வீடு மீது தாக்குதல் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில், ஐதராபாத் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web