கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சி! திருவண்ணாமலையில் பரபரப்பு!

 
தீக்குளிப்பு

இந்த கொரோனா ஊரடங்கு காலம் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு விதமான குற்றச் செயல்களை அதிகரிக்க செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து  தீக்குளிக்க முயன்றதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கபடுகிறது. அந்த வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் ( 67). என்பவர் தனது மகன் வெங்கடேசன், மகள் சித்ரா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது வெங்கடேசன் தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி கொள்ள முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஓடி வந்து தீப்பெட்டியை பறித்து கொண்டு அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார்.  பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தீக்குளிப்பு

அப்போது வெங்கடேசன் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமாக 78 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். சமீபத்தில் அந்த நிலத்தில் சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு இருந்தது. இந்த மரவள்ளி கிழக்கு செடிகளை அவர்கள் அடியாட்களுடன் வந்து அழித்ததோடு மட்டுமின்றி தாய் முனியம்மாளையும் தாக்கிவிட்டு சென்று உள்ளனர். இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தால் விசாரணை நடத்த ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். அதனால் எங்கள் நிலத்தை மீட்டுத் தரக்கோரியும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும் தீக்குளிக்க முயன்றதாக கூறினார். 

இதையடுத்து அவர்களை போலீசார் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சேகர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மொபட்டில் மறைத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திடீரென தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து கொண்டனர். அப்போது சேகரின் மனைவி தரையில் படுத்து உருண்டு கதறி அழுதார். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

தீக்குளிப்பு

அப்போது சேகர் கூறுகையில், வடஆண்டாப்பட்டு பகுதியில் நான் மற்றும் எனது 2 சகோதரர்கள் பெயர்களில் உள்ள இடத்தின் பட்டாவை ரத்து செய்து எந்தவித உரிமையும் இல்லாத நபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதை ரத்து செய்து எங்கள் பெயரில் பட்டாவை மாற்றி தர வேண்டும் என்றார். இதையடுத்து அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெவ்வேறு தரப்பினர் திடீரென டீசல் மற்றும் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web