ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு!! இனி ரயில்வே தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தும்!!

 
யுபிஎஸ்சி

ரயில்வே பணியின் ஆட்சேர்ப்புக்கான தேர்வுகள் அனைத்தும்   IRMS மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய ரயில்வே மேலாண்மை சேவை   தேர்வானது வரும் 2023 முதல் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முறையில் நடத்தப்படும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்வை யுபிஎஸ்சி நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி

ஐஆர்எம்எஸ் தேர்வு 2 நிலைகளைக் கொண்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலைத் தொடர்ந்து சோதனைத் தேர்வு நடத்தப்படும் ஐஆர்எம்எஸ் முதன்மை எழுத்துத் தேர்வில், தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ்  தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அமைச்சகம்   தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி

ஐஆர்எம்எஸ்  முதன்மை தேர்வு நான்கு தாள்களைக் கொண்டிருக்கும், பாடத் தொகுப்புகளில் வழக்கமான கட்டுரை வகை கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. தகுதி தேர்வானது தேர்வர்கள் தேர்வு செய்யும் விருப்ப மொழி பாடமாகவும், 2 வது தாள் ஆங்கில தாளாகவும் இருக்கும். IRMS UPSC 2023 தேர்வு குறித்த மேலும் அதிக தகவல்களை upsc.gov.in. என்ற அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web