ஜெயலலிதா பயன்படுத்திய 29 பொருட்கள் ஏலம்.. நீதிமன்றம் உத்தரவு !

 
jaya

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, தி.மு.க., அரசு 1996ல் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, 1996 டிசம்பர் 11ல், கணக்கில் காட்டப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் இந்த வழக்கு விசாரணை, பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், இந்தப் பொருட்கள், விதான் சவுதாவின் தரை தளத்தில் உள்ள அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

jaya

ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள்; 750 அலங்கரிக்கப்பட்ட செருப்புகள்; 250 சால்வைகள் சேதம் அடையும் தன்மைஉடையது.  தற்போது, ஜெயலலிதா உயிருடன் இல்லை. எனவே அவற்றை தாமதப்படுத்தாமல் ஏலம் விட வேண்டும். இவற்றை அவரது ஆதரவாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். தாமதப்படுத்தினால் கழிவாக மாறிவிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இம்மனு, முதன்மை நீதிபதி ராமசந்திர டி.ஹுத்தார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள் உள்பட 29 பொருட்களை உடனடியாக ஏலம் விட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு சரியானதே. எனவே, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
 
 

From around the web