ஆடி வெள்ளி திருவிழா! கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்தவர் பலி! மதுரையில் சோகம்!

 
கூழ் அண்டா

கொதித்துக் கொண்டிருந்த கூழ் நிரம்பிய அண்டாவில் தவறி விழுந்தவர் பலியானது திருவிழாவுக்கு திரண்டிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வு வெகு விமரிசையாக நடப்பதுண்டு. அந்த வகையில், மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்க 6க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது.

அம்மன் கோவில்

அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் முருகன் என்பவருக்கு எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டது. அந்த வலிப்பின் தாக்கம் காரணமாக அவர் கொதித்துக் கொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது விழுந்தார்.

அதிக வெப்பத்துடன் கொதித்துக் கொண்டிருந்த கூழ் உடல் முழுவதும் கொட்டியதால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூழ் அண்டா

சுமார் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆடி மாதம் திருவிழாவில் கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web