தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி பொது விடுமுறை!

 
ஜூலை 21ம் தேதி பக்ரீத்!தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி மொஹரம் பண்டிகையையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மொஹரம்

354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை மொகரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை.

மொஹரம் ரம்ஜான் பக்ரீத் முஸ்லீம் மசூதி

ஆகையால், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) அன்று மொகரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொகரம் பண்டிகையான ஆகஸ்ட் 9ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web