விழிபிதுங்கும் பொதுமக்கள்!! மின் கட்டண உயர்வு தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு!!

 
மின்சாரம் ஸ்டாலின்

தமிழகத்தில்  மின் கட்டணத்தை உயர்ந்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கே.வெங்கடாசலம் என்ற தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில், தற்போது தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். மேலும் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் பதவியில் யாரும் இல்லை. 

மின்சாரம்

ஆகவே சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கக் கூடாது என்று மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு கடந்த வாரம் நீதிபதி  சுவமிநாதன்,  முன்பு விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த மார்ச் 17ம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும் கடந்த மே 5ம் தேதி சட்டத்துறை உறுப்பினரும் ஓய்வு பெற்றார். எனவே இந்த 2 காலி பணியிடங்களை தமிழக அரசு ஒரே நேரத்தில் நிரப்பி இருக்கலாம்.

மின்சாரம்

இருப்பினும் தற்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் இல்லாததால் அவரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இருப்பினும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறலாம் என்று அனுமதியும் அளித்தார். இதனால் தற்போது மின் கட்டண உயர்வு அதிகரிக்காத என்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.ஆனால் அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web