BIG NEWS!! நாளை சிலிண்டர் முதல் வட்டி விகிதம் வரை என்னென்ன மாற்றங்கள்?! முழு தகவல்கள்!!

 
சிலிண்டர்

ஜூலை மாதம் இன்னும் சில மணி நேரங்களில் முடிவடைய உள்ளது. இந்தியா முழுவதும் மாதத்தின் முதல் தேதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் நடுத்தர, ஏழை எளிய மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.இதில் குறிப்பாக  எல்பிஜி எரிவாயு விலை, வங்கி அமைப்பு, வருமான வரி ரிட்டர்ன்ஸ் மற்றும் பிஎம் கிசான் இவைகள் முக்கியமானவை. 

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!


பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள்  ஆகஸ்ட் 1 முதல் செக் மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளை வங்கி மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாசிட்டிவ் பே முறை செயல்படுத்தப்படும். அதே போல் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம். நிறுவனங்கள் இம்முறை வீட்டு உபயோக மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். ஜூலை மாதத்தில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.


பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. ஆகஸ்ட் முதல் விவசாயிகள் கேஒய்சி பூர்த்தி செய்ய முடியாது. ரிசர்வ் வங்கி  ரெப்போ விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இனி வரும் கூட்டத்திலும் கட்டாயம் அதிகரிக்கக் கூடும். அதே போல்  சேமிப்புகளுக்காக முதலீடுகளும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாங்க் ஆப் பரோடா

அதே போல் மிக முக்கியமாக வருமான வரி தாக்கல் செய்ய இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. மத்திய அரசு ஏற்கனவே இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  இன்றுக்குள் வருமான வரி தாக்கல் செய்யப்படாவிட்டால், நாளை முதல்  அபராதம் விதிக்கப்படலாம். அதன்படி ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், ரூ.1,000 அபராதமும், அதற்கு மேல் வரி  செலுத்த வேண்டியவர்கள் ரூ. 5000 அபராத கட்டணமும் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web