திருமணத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் ....!!

 
பாஜக அதிமுக


என்ன சார்லஸ் பிப்ரவரி 1ம்தேதி திருச்சியே திமிலோகப்படப்போகுது போல இருக்கு, என்னங்க சொலீறிங்க தலைவரே அடுத்த மாசம் ஈரோடு கிழக்குலதான தேர்தல் திருச்சி திமிலோகப்படப்பொகுதுனு சொல்றீங்களே தலைவரே வெயில்கூட அதிகமா இல்லையே ஒருவேளை பட்ஜெட் கூட்டத்தை திருச்சியில நடத்தப் போறாங்களா ?
நீ வேறப்பா, திராவிட மாடல்னா சாதிகளைப்பிரிச்சு தங்களுக்கு சாதகமானவங்களா ஆக்கி அவங்கள அடிமைக்கூட்டமாகவே வச்சு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியை தக்க வச்சுகிட்டு இருக்காங்க ஆமாம் முன்ன , அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கலைஞர் இவங்களுக்கு வந்த கூட்டம் ”தானா சேர்ந்த கூட்டம்” அதன்பிறகு ஜெயலலிதா காலம் ஸ்டாலின் காலம் எல்லாம் காசு கொடுக்காம கூட்ட முடியாத கூட்டம்,

திருச்சி மலைக்கோட்டை
என்ன தலைவரே ஏதோ பீடிகை போடுறீங்க நேரடியா சொல்லுங்க, ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கலையா
ஆஹா ஆஹா  தலைவரே ஆர்.வி மேட்டருக்கு வர்றீங்க போல, கொஞ்சம் பக்கத்துல வந்துட்ட சரிதான் மத்தத நான் கன்டினியூ பண்றேன், திருச்சி உட்பட கிட்டத்தட்ட அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கோலோச்சும் சமூகம்னா அது முத்தரையர்கள்தான்.
அதுதான் தெரிஞ்ச கதையாச்சே தலைவரே...
அவர்களின் பெரும்பாலான வாக்குகள் எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து சிந்தாமா சிதறாம அதிமுகவிற்குதான் போகும் அதற்கு முக்கியகாரணம், ராஜமாணிக்கம் என்பரை அந்த காலத்திலேயே டிஎன்பிஎஸ்ஸில நியமனம் செய்தது அதன்பின் பேராவூரணி குழ. செல்லையாவை அமைச்சராக்கி அழகு பார்த்தது அதிமுகவின் கே.பி.காத்தமுத்து என்பவரை எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தது இதே பாலிசியை ஜெயலலிதாவும் கடைபிடித்தார் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்பிரமணியன், பரஞ்சோதி, சிவபதி, வளர்மதினு இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சரி இப்ப எதுக்கு அந்தகால கதை தலைவரே... 
பொறுத்தார் பூமி ஆள்வார் புரியுதா சார்லஸ்,அதிமுக ஆளும் கட்சி என்றால் அமைச்சரவையில் அந்த சமூதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் கண்டிப்பாக இடமுண்டு பின்னர் வந்த காலத்தில் அதே ஃபார்முலாவை திமுக கையில் எடுத்தது என்.செல்வராஜ் தொடர்ந்து திமுகவில் அமைச்சராக இருந்தார், ஆனால் மதிமுக போய் திரும்ப வந்தவருக்கும் அமைச்சர் பதவி மீண்டும் வழங்கி அருகே வைத்துக்கொண்டார் கருணாநிதி அதன்பின் இப்பொழுது ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அமைச்சரவையில் மெய்யநாதன் இடம் பிடித்திருக்கிறார்.
சரி சரி விஷயத்துக்கு வாங்க தலைவரே வந்துட்டா போச்சு... அப்படி சக்திவாய்ந்த ஒரு சமுதாயத்தை சத்தமில்லாமல் பாஜக பக்கம் இழுக்கப்போவதாக அதற்காக பிரம்மாண்டவிழாவாக திருச்சியில் நடக்கும் திருமண நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டுகிறார்கள். 

பாஜக அதிமுக
அப்படியா சொல்றீங்க தலைவரே !
ஆமாம் சார்லஸ், வருகின்ற பிப்ரவரி 1ம்தேதி தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் மகள் ஹேமமாலினியின்  திருமணவிழா இதில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ஆர்.விதான் முக்கிய விருந்தினர்னு பார்த்தா, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை மட்டுமல்லாமல் பொன்னார், சி.பி.ஆர், ஹெச்.ராஜா டாக்டர் ஸ்ரீனிவாசன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன்னு பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு கொண்டே போகுது மத்திய அமைச்சர் இருவர் வருவதாக இருந்ததாம் ஆனால் பட்ஜெட் அதனால பின்னொரு நாளில் வந்து சந்திக்கிறோம்னு சொல்லியிருக்காங்களாம், 
எல்லாம் சரி தலைவரே இது பொண்ணு வீட்டு சைடுல பையனும் அப்ப பெரிய ஆளா இருக்கணுமே ?
சரியா சொன்ன அதிமுகவின் எம்.எல்.ஏவா இருந்து மறைந்த கே.பி.காத்தமுத்துவின் பேரன் குகன்தான் மாப்பிள்ளை அதுசரி அப்படினா கூட்டணி உறுதி அப்படித்தானே தலைவரே
திருமண கூட்டணி உறுதி ! ஈரோடு கிழக்கு தேர்தல் கூட்டணிதான் கேள்விக்குறியா இருக்கு பார்ப்போம்...

From around the web