பாஜக ஆட்சி... முதல் கையெழுத்தில் அறநிலையத்துறை நீக்கம்.. அண்ணாமலை காட்டம் !!

 
அண்ணாமலை

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவின் ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் பங்கேற்றனர்.

Temple

அப்போது தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் பேசிய அதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இந்து கோயில்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம் ஆனால் நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இந்து கோயில்களுக்கு சொந்தமான சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும்.
ஆகம விதிமுறைகள்படி கோவில் வழிபாடுகளில் அரசு தலையிட கூடாது. அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது எனவும் அண்ணாமலை பேசினார். கோயில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
Vj
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத்துறையை நீக்குவதுதான். அறநிலையத்துறை என்ற ஒரு துறை தேவையில்லை. தமிழ்நாட்டில் சாதியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது என கூறினார்.
From around the web