BREAKING!! தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா மரணம்!! ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!!

 
கிருஷ்ணா

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. இவரது மகன் தற்போது தெலுங்கு திரையுலகில் முண்ணனி கதாநாயகனாக இருந்து வருபவர்  நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு வயது 80. நடிகர் கிருஷ்ணா நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து விட்டார். பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

கிருஷ்ணா

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தொடர்சிகிச்சைக்கு பிறகு அவர் சுயநினைவை அடைந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்ததும் அவரது ரசிகர்கள், உறவினர்கள், பிரபலங்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினர்.  நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  

கிருஷ்ணா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் கிருஷ்ணா 2016ல் வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.  தெலுங்கு திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் கிருஷ்ணா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தாயை இழந்த நடிகர் மகேஷ்பாபு தற்போது தந்தையையும் இழந்துள்ளார். அடுத்தடுத்து இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web