BREAKING!! அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது!! பெரும் பரபரப்பு!!

 
போலீஸ்

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. மேலும் 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

விஜயபாஸ்கர் ரெய்டு வேலுமணி

இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதி இந்த வழக்கு மீண்டும் வீசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது உள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய 26 இடங்களிலும், அவரது நண்பர் சந்திரசேகர் தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் 10, கோவையில் 9, திருச்சி, தாம்பரம்,ஆவடி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எஸ்.பி வேலுமணி மீது புகார் கூறியுள்ளனர்.

விஜயபாஸ்கர் ரெய்டு

அதே போல் தேசிய மருத்துவ குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்தாக புகார் எழுந்துள்ளது. விஜயபாஸ்கர் மீதான புகாரில் ஆவணங்களை கைப்பற்ற 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை என தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் அருகே மஞ்சங்காரனையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அளித்துள்ளார். 250 படுக்கைக்களுடன் மருத்துவமனை முழுமையாக இயங்கி வருவதாகவும் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து சி.விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் 5, சேலத்தில் 3 , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம், தலா ஒரு இடம் என 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவையில் வேலுமணி வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நடத்தவிடாமல்  அதிமுக எம்எல்ஏக்கள் இடையூறு செய்தனர். இவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், கந்தசாமி, தாமோதரன், அமுல் கந்தசாமி, ஏகே செல்வராஜ், பிஆர்ஜி அருண்குமார் மற்றும் ஜெயராம் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
எஸ்பி வேலுமணியின் வீட்டிற்கு செல்லும் இணைப்பு சாலைகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தஞ்சமடைந்த எஸ்பி வேலுமணி ஆதரவாளர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இதனால் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பெரும் பரபரப்பு  நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web