BREAKING!! கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்!! உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

 
ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து பெற்றோர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் கலவரமாக வெடித்தது. இந்நிலையில் பள்ளியில் தாளாளர் உட்பட கலவரத்திற்கு காரணமானவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

ஸ்ரீமதி

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு பிறகு பள்ளி  நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட  3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஸ்ரீமதி
கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு சம்பந்தப்பட்ட வழக்கில்  தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உட்பட  5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்,  உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விரிவான உத்தரவு பின்னர் இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகளின் படியே 2வது உடற்கூராய்விலும் முரண்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.  மாணவியின் மரணம் கொலைதான் என தெரிந்தால் கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என சிபிசிஐடி உத்தரவாதம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web