BREAKING!! செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்பவர்கள் 4 பேருக்கு கொரோனா!! மருத்துவமனையில் அனுமதி!!

 
செஸ்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகள் பங்கேற்பதுடன் 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 

நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துவக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் போட்டிகளை இன்று துவக்கிவைக்கவுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் முருகன் ஆகியோர் இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சென்னை செஸ்

இந்நிலையில, செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரு விளையாட்டரங்களில் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

செஸ் ஒலிம்பியாட்

அதில் செஸ் ஒலிம்பியாட் கலைக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலைவிழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்று உறுதியான நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர். குரங்கம்மை மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தவும் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web