BREAKING!! அரசு மருத்துவர்களுக்கு நல்ல செய்தி! சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு..

 
உச்சநீதிமன்றம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் கடந்த 2020ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

மருத்துவர்கள்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றம்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி 15 நாட்களில் இந்தாண்டு சேர்க்கைக்கான இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள இடங்கள் குறித்து 16-வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

From around the web