BREAKING!! 27 பேருக்கும் ஆயுள் தண்டனை!! கச்சநத்தம் படுகொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!!

 
சிவகங்கை


நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது.கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி நள்ளிரவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் என்ற கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் நுழைந்தது. ஆதி திராவிடர்கள் வசிக்கும் இந்த பகுதிக்குள் திடீரென்று அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் சிக்கி ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை

இது குறித்து  பழையனூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ஏராளமானோரை அதிரடியாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்த வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 28ம் தேதி வழங்கப்படுவதாக இருந்த நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 27 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர்களின் தண்டனை விவரம் குறித்து இன்று (ஆகஸ்டு 5ம்தேதி) வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சிவகங்கை

இந்நிலையில் சிவகங்கை நீதிமன்றம் குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் முழுமையான தீர்ப்பு விவரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.4 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web