BREAKING!! இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
இல்லத்தரசிகள்


புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி 2022&2023 நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் முக்கிய அம்சமாக புதுச்சேரியில் பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

இல்லத்தரசிகள்


புதுச்சேரி சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடியதும் புதுச்சேரியின் முதல்வராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வரும் ரங்கசாமி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் அனுமதியின்படி மொத்த பட்ஜெட் ரூ.10,696 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இதன்படி பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரியில் மருத்துவ துறைசார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புள் வெளியிடப்பட்டுள்ளன. அவை, காரைக்காலில் வன அறிவியல் மையம் மற்றும் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படுகிறது. காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. மேலும் புதிய அரசு மருத்துவனை ரூ.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.1 கோடியில் இருந்து இரட்டிப்பாக ரூ.2 கோடியாக உயர்த்தப்படுகிறது.

மீனவ கிராமங்களில் மிதக்கும் படகுத்துறையும், காரைக்கால்& இலங்கை இடையேயான காங்கேசம் துறைமுகத்துக்கு நடப்பாடு முதல் பயணிகள் சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.802 கோ£ நிதி ஒதுக்கீடு செய்த அரசு, பள்ளிகளில் பொழிவுரு வகுப்புகள் அமைக்கப்படுகிறது. மேலும் நடப்பாண்டு முதல் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. மேலும் புதுச்சேரியில் 57 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அரசின் எந்த உதவித் தொகையும் பெறாத பெண்கள் மட்டுமே இந்த ரூ,1,000 உதவித்தொகை பெற தகுதியானவர்கள் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அ¬ந்துள்ளனர். புதுச்சேரி சட்டமன்றத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?