#BREAKING: நடிகை அமலாபாலுக்கு பாலியல் துன்புறுத்தல்! கொலை மிரட்டல்! முன்னாள் காதலன் பவ்நீந்தர் சிங் கைது!

 
நடிகை அமலாபால்

தன்னுடைய அதிரடியான க்ளாமர் நடிப்பின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதன் பிறகு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான படங்களில் நடித்திருந்தாலும், அதிரடியாக ஆடையில்லாமல் நடித்த ஆடை படம் நடிகை அமலாபால் கால்ஷீட் டைரியை காலியாக்கியது. 

அமலாபால்

இயக்குநர் விஜய்யுடனான காதல், திருமணம் அதன் பின்னான விவாகரத்து எல்லாம் நடிகை அமலாபால் சினிமா கேரியரில் பின்னடைவை ஏற்படுத்த, அவ்வப்போது அவருடைய இன்ஸ்டா, ட்விட்டர் பக்கங்களில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். 

இந்நிலையில், நடிகை அமலாபாலுக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், நடிகை அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றினை துவங்கி, கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து செய்து வந்துள்ளனர்.

அமலாபால்

பின்னர், நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொள்வதாக பவ்நிந்தர் சிங் தத் கூறி பலமுறை அமலாபாலுடன் ஒன்றாக இருந்து விட்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் நடிகை அமலா பால் சார்பில் தற்போது விழுப்புர மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் ஒன்று அளிக்கபட்டிருக்குது. அந்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்த போது சிலர் நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லைத் தந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. 

அமலாபால்

விழுப்புரம் அருகே இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகை அமலாபாலை மிரட்டியதாவும் புகாரில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக நடிகை அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். கூடவே பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாக தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தல் செய்ததாக கடந்த 26ம்  தேதி எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகாரின் பேரில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செஞ்சு முதலியார் சாவடியில் இருந்த பவ்நிந்தர் சிங் தத் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web