BREAKING: மாணவி ஸ்ரீமதியின் மரணம்! மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை!

 
ஸ்ரீமதி

தற்கொலை செய்து கொண்ட 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 13ம் தேதி தனியார் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மரணத்தின் சந்தேகம் இருப்பதாகக் கூறி குடும்பத்தினர், உறவினர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, மகளின் மரணத்தில் நியாயம் கிடைக்காத வரை அவரின் உடலை வாங்கப் போவது இல்லை என்று தெரிவித்தனர். மேலும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மாணவின் தற்கொலையால் கொதித்து போன பொது மக்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றிலுமாக சூறையாடியது. பள்ளி வளாக கட்டிடம், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் மக்களை பொறுமை காக்கும்படி கூறினார்கள். மேலும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர்.

ஸ்ரீமதி

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அது குறித்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை ஏற்று மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த பிரேத பரிசோதனையை முறைப்படி வீடியோ எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web