#BREAKING: சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வாகன ஓட்டிகள் அவதி!

 
நம்ம மாவட்டத்தில  சதமடித்தது  பெட்ரோல்  விலை!

சென்னையில் இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்களும், அலுவலகத்திற்கு செல்பவர்களும் நீண்ட வரிசையில் தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருந்து, புலம்பி சென்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்  நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல்
அதன்படி, சென்னையில் 107-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மேலும், பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

From around the web