BREAKING: குடியரசு தினம்.. தேசிய கொடி ஏற்றினார் ஆளுநர் ஆர்.என். ரவி !!
Updated: Jan 26, 2023, 08:25 IST

74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 74வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த ஆளுநர் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர், தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
தொடர்ந்து முப்படை வீரர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ரவி ஏற்று கொண்டார். விங் கமாண்டர் பிரசாந்த் சர்மா தலைமையில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
From around the
web