#BREAKING : தமிழ்கடல் நெல்லை கண்ணன் காலமானார்! தலைவர்கள் அதிர்ச்சி!

 
நெல்லை

பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், இலக்கியவாதி, தமிழ்கடல் நெல்லைக் கண்ணன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77. 

காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு  ஒதுக்கப்பட்ட போது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டதால் அதிகளவில் பிரபலமானார். 

நெல்லை கண்ணன்

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட கண்ணன் பாரதி கவிதைகள்,கம்பராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர். இவரது மேடைப் பேச்சு பிரபலமானது.  70களில் தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு ஈடு கொடுத்த ஒரே காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மட்டும் தான். அரசியல் மேடைகளில் ஆன்மிகமும், ஆன்மிக மேடைகளில் அரசியலும் கலந்து பேசுவது நெல்லை கண்ணனின் பாணி. 
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலர், துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். கேரளாவின் ஆண்டனி, இன்றைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இவரது நண்பர்கள். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் இவரைத் தான் நெல்லையில் நிற்க வைப்பார்கள்.  தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ராகுல் காந்தி இவரது வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டது உண்டு. 



ஒரு முறை நடிகர் திலகம் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில், பாளையங்கோட்டையில் சிவாஜி பேசுவதாக ஏற்பாடு ஆகி இருந்தது. சிவாஜி வரும் வரை பேசுங்கள் என்று கண்ணனை மேடை ஏற்றி விட்டார்கள். சிவாஜி வருவதற்கு 5 மணி நேரம் தாமதமானது. அது வரை கண்ணன் பேசிக் கொண்டே இருந்தார். கூட்டத்தில் இருந்து ஒருவர் கூட, அவரது பேச்சை கேட்காமல் கடைசி வரை எழுந்து செல்லாமல் இருந்தனர். 

ஜனவரி 27, 1945l பிறந்த திரு.நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் முதலிய முக்கிய தலைவர்கள், ஆளுமைகளுடன் 1970களில் தொடங்கி நெருங்கி பழகியவர். திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணனின் தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை,  தாயார் முத்து இலக்குமி அம்மாள். 
நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் eழுத்தாளராகவும், திரைப்பட  இயக்குநராகவும் உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web