விஜய் பட நடிகைக்கு பெண் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்!

 
பிபாசா பாசு

தமிழில் விஜய் ஜோடியாக சச்சின் படத்தில் அறிமுகமான நடிகை பிபாசா பாசுவுக்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ‘அஜ்னபீ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை பிபாசா பாசு. இதைத் தொடர்ந்து முதல் தெலுங்கு படத்தில் நடித்தார்.  இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி இருக்கிறார்.

பிபாச பாசு

‘அலோன்’ படத்தில் நடிக்கும் போது பிபாசா பாசு, கரண் சிங் குரோவருக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2016ம் ஆண்டு முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ‘டேஞ்சரஸ்’ என்ற வெப் தொடரில் தம்பதிகள் இருவரும் இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பிபாசா பாசு கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டகிராமில் அறிவித்தார். அதன்பிறகு அது தொடர்பான சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், நடிகை பிபாசா பாசுவிற்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. நடிகர் கரண் சிங் குரோவர் - நடிகை பிபாஷா பாசு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தம்பதிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web