பகீர்!! சகமாணவனை அடித்து கொலை செய்த +2 மாணவன்!!தொடரும் பயங்கரம்!!

 
மாணவர் தகராறு

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அசம்பாவிதங்களை தடுக்க இயலாமல் தவித்து வருகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றூள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ள கப்பல் வாடி பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று. இந்த பள்ளியில்  500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

போலீஸ்

இன்று பிற்பகல் பள்ளி இடைவேளையில்  12-ம் 2 இரண்டு மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பள்ளியில் சமையல் செய்வதற்காக  வைக்கப்பட்டிருந்த தென்னை பாளையை கொண்டு உடன் படிக்கும் மாணவனை தாக்கத் தொடங்கினார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.  அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறி மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

கிருஷ்ணகிரி

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அம்மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் மாணவனை தாக்கிய சகமாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உயிரிழந்த மாணவனும், அவனை தாக்கியவனும்  அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவர்கள் என்பதால் கிராமம் முழுவதுமே பதட்டமான சூழல் நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கிராமம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடாமல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web