பகீர்!! ஆசிட்டில் மிளகாய் பொடி சேர்த்து கொதிக்க வைத்து கணவன் மேல் ஊற்றிய மனைவி!!

 
ஆசிட்

குடி போதையில் மனைவியை தாக்கியதால் மிளகாய் பொடியை ஆசிட்டில் போட்டு கொதிக்க வைத்து கணவன் மீது ஊற்றிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசம் பரேலியில் பராகான் என்ற 27 வயது பெண்ணும், மொகமத் யாசீன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. யாசீன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

ஆசிட்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவர் யாசீன் வருகைக்காக பராகான் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் வந்ததால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யாசீன், மனைவியை கன்னத்தில் பளார் என்று அடித்தார்.இதனால் அதிர்ந்து போன பராகான் தனது கணவருக்கு பாடம் கற்பிக்க எண்ணினார். பாத்ரூமில் இருந்த ஆசீட்டை எடுத்து அதில் மிளகாய்தூளை கலந்து கொதிக்க வைத்து தயாராக வைத்தார்.

ஆசிட்

கணவன் யாசீன் தூங்கிய பிறகு அவர் மீது ஊற்றி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யாசீனுக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து யாசீனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பராகானை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் தினமும் அடித்து சித்ரவதை செய்த கணவரை, மனைவி கொடூரமாக பழி வாங்கிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?