பகீர்!! எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு!! வலியில் துடிக்கும் வாயில்லா ஜீவன்கள்!!

 
எருமை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் அதிகளவு மக்கள் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அவற்றில் இருந்து கரக்கப்படும் பாலை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.அதேபோன்று ராஜ்குமார் என்பவர் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்வதுடன் 40 எருமை மாடுகளையும் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது பண்ணை மேட்டுப்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் எருமைமாடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவற்றின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட தாய், கன்று உள்ளிட்ட எருமைகளின் தலைபகுதி, முதுகு, கால் என பல்வேறு பகுதிகளில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

எருமை

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், வருவாய்த்துறை மற்றும் மேட்டுப்பாளையும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எருமை மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த எருமை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். காயம் காரணமாக உணவு உட்கொள்ள முடியாமல் எருமை மாடுகள் அவதிப்பட்டு வருகின்றன. 

எருமை
இதைத்தொடர்ந்து புளூகிராஸ் அமைப்பினர் வாயில்லா ஜீவன்கள் மீது நடத்தப்பட்ட ஆசிட் வீச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web