பகீர்!! தாயின் மடியில் இருந்த குழந்தையை கடத்த முயற்சி!! அடித்தே கொலை செய்த பொதுமக்கள்!!

 
அடித்தே கொலை

தாயின் மடியில் இருந்த குழந்தையை மர்ம நபர் கடத்திச் செல்ல முயன்றபோது பொதுமக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்றிரவு தாயின் மடியில் இருந்த குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் கடத்திச் செல்ல முயற்சித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குழந்தையின் தாயின் கூச்சலிட்டு தனது குழந்தையை அந்த மர்ம நபரிடம் இருந்து மீட்கப் போராடினார்.

அடித்து கொலை

சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மர்ம நபரிடம் இருந்து மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் அந்த நபர் தப்பியோட முயற்சித்தார். அந்த ஆசாமியை விரட்டி பிடித்த பொது மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த கடத்தல் முயற்சி சம்பவம் குறித்து உடனடியாக பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், மயங்கி கிடந்த கடத்தல் ஆசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ்

இறந்துபோன நபர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்த இடங்களில் ஏதேனும் கண்காணிப்பு பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.தாயின் மடியில் இருந்த குழந்தையை கடத்த முயன்ற வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!