பகீர்!! ரூ1400 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!! சுற்றி வளைத்த போலீஸ்!!

 
போதை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் இன்று போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 703 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.மும்பை நகரில் பால்கர் மாவட்டத்தில் நலசோபரா நகரில் இன்று போதை பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீரன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் சில  சந்தேகத்திற்குரிய நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடுடும் உண்மைகள் வெளிவந்தன.

போதை

போலீசில் சிக்கியவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அவர்களின் வசம் 703 கிலோ கிராம் எடை கொண்ட எம்.டி. வகை போதை பொருள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,400 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ்

இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்? 703 கிலோ அளவுக்கு போதைப் பொருள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? யார் கொடுத்தார்கள்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும் போதை பொருள் ஒழிப்பு பிரிவு துணை காவல் ஆணையாளர் தத்தா நலவாடே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மும்பையில் அதிக எடை கொண்ட போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web