பகீர்!! மனைவி , 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை!!

 
விவசாயி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முருகன்(39). இவரது மனைவி சுரேகா (36). இந்த தம்பதிக்கு யோகிதா (16) ஒரு மகளும், மோகனன் (11) ஒரு மகனும் உள்ளனர். 

இவரது மகள் யோகிதா மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். மகன் மோகனன் பாலமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார். முருகன் தனது குடும்பத்துடன் குலமங்கலம் அருகே உள்ள ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே தங்கி வசித்து வந்தனர். 

காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் குதித்த காதலன்!!

இந்த நிலையில் நேற்று இரவு தனது உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவரது உறுவினர் மீண்டும் முருகனை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 

அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் அந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் கிணற்றில் மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரத் தாய் !

பின்னர் அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர். அதில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இறந்து விட்டநிலையில், கழுத்து அறுக்கப்பட்டு கணவர் முருகன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?