வெச்சு செய்யுறாய்ங்க! ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மும்மடங்கு உயர்வு!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்

பண்டிகை காலங்கள் என்றாலே குடும்ப தலைவர்களின் பாடு திண்டாட்டம் தான். ஏற்கெனவே காய்கறி விலையில் துவங்கி, அரிசி, பருப்பு, பால் பொருட்கள் என அனைத்தும் விலையும் விண்ணைத் தொட்டு நிற்கிறது. கொரோனா  ஊரடங்கு காலத்திற்குப் பிறகான வாழ்க்கை, பழைய கடன்களை அடைத்து நிமிரவே பல குடும்பங்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு இந்த தீபாவளி விடுமுறைக்கு செல்ல இப்போதில் இருந்தே கலவரத்துடன் நிற்கிறார்கள் மிஸ்டர் பொதுஜனம்.

தீபாவளி ஷாப்பிங் ஒரு புறம் என்றால், வீட்டு வாசலில் இருந்து ஆட்டோ பிடிப்பதிலேயே விழி பிதுங்கி நிற்கும் பொதுஜனத்திற்கு, இந்த வருடம் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் வெச்சு செய்ய காத்திருக்கிறது.  அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, அதற்கு அடுத்த நாள் செவ்வாய்கிழமையும் சேர்த்து விடுமுறை விட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. நாளை வெள்ளிக்கிழமை வார இறுதி நாள். அடுத்து சனி , ஞாயிறு வழக்கமான விடுமுறைகள் . தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையை கொண்டாட பலரும் பணிபுரியும் இடத்திலிருந்து சொந்த ஊர் செல்கின்றனர்.

ஆம்னி

இதன் அடிப்படையில் நாளை அக்டோபர் 21 முதல் ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு ரயில்கள், அரசு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முன்பதிவு முடிந்து விட்டன. இந்நிலையில்  கடைசி நேர  மற்றும் சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஆம்னி பேருந்துகளையே விரும்புவர். அந்த வகையில்  தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. நாளை பயணம் செய்ய  ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டன.

ஆம்னி

ஒரு சில பேருந்துகளில் மட்டும் ஒரு சில இருக்கைகள்  மட்டுமே காலியாக உள்ளன. ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதே போல் அக்டோபர்  22, 23ம் தேதிகளில் அனைத்து பேருந்துகளும் நிரம்பி விட்டன.  தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பஸ்களில் கட்டம் பல மடங்கு உயர்த்தியுள்ளதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதன்படி  சென்னையில் இருந்து திருச்சி, மதுரை என  தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ. 3000 முதல் ரூ3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்தும் ஆம்னி பேருந்துகள் வழக்கமான கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web