பகீர்!! ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மயக்கம்!! 60 பயணிகளின் கதி என்ன?!

 
பேருந்து

நீலகிரி மாவட்டத்தில் குன்னூரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து தினசரி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் பால்மராலீஸ் பகுதியிலிருந்து அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தை குன்னூர் அருகேயுள்ள சேலாஸ் பகுதியில் 54 வயதான  இளங்கோ ஓட்டி வந்தார். 


பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள காட்டேரி அருகில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் இளங்கோவிற்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டது. ஓட்டுநர் சாமர்த்தியமாக இடது புறத்தில் சுவற்றில் இடித்து பேருந்தை நிறுத்தினார். 

குன்னூர்
இதில் பயணம் செய்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்றிணைந்து  பேருந்து ஓட்டுநர் இளங்கோவையும் காயமடைந்தவர்களையும் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  2 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து குன்னூர் மருத்துவமனைக்கு விரைந்து வந்த குன்னூர் மற்றும் வருவாய் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.திடீரென அரசு பேருந்து ஓட்டுநருக்கு தலை சுற்றல் ஏற்பட்ட  நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டதால்  பேருந்தில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web