பகீர்! கல்யாண விருந்தில் களேபரம்!! ஒருவர் கத்தியால் குத்தி கொலை!

 
மோதல்

திருமணங்கள் என்றாலே கொண்டாட்டம் தான். அதில் சில நேரங்களில் உறவினர்கள் தகராறு , குடும்ப பிரச்சனை காரணமாக எதிர்பாராத களேபரங்களும், அசம்பாவிதங்களும் நடந்து விடுவதுண்டு. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மொகல்லா ஷைக்கானில் வசித்து வருபவர் உஸ்மான். இவரது மகள்கள்  ஜைனப் மற்றும் சாஜியா, கந்தௌலி மொஹல்லா வணிகர் குடியிருப்பில் வசிக்கும் வாக்கரின் மகன்களான ஜாவேத் மற்றும் ரஷித் ஆகியோருடன் விநாயக் பவனில் திருமணம் நடைபெற்றது. 

5வது திருமணம்

இதில் விருந்தில் குலாப் ஜாமூன் தட்டுப்பாடு காரணமாக மணமகன் வீட்டாருக்கும் மணமகள் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இதற்கிடையில், ஒருவர் கத்தியை எடுத்து மக்களைத் தாக்க தொடங்கினார், இதில் பலர் காயமடைந்தனர். 

இது தொடர்பாக எட்மத்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், காயமடைத்தவர்களை மீட்டு அருகில் இருந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சன்னி என்பவரின் மகன் கலீல் பரிதாபமாக உயிரிழந்தார். 

குலோப்ஜாமூன்

இது குறித்து எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவி குமார் குப்தா கூறுகையில், குலாப் ஜாமூன் தட்டுப்பாடு குறித்த வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது, மேலும் ஒரு நபர் கலந்து கொண்டவர்களை கத்தியால் சரமாறியாக தாக்கினார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கலீல் (20) என்பவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த மேலும் 5 பேர் எட்மத்பூரில் உள்ள சமூக சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

 

From around the web