பகீர்.. 10ம் வகுப்பு மாணவி தாய் கண்ணெதிரில் கடத்தல்! ஒரு மணி நேரத்தில் மாணவியை மீட்ட போலீசார்!

 
மாணவி கடத்தல் காணவில்லை

10ம் வகுப்பு பயிலும் மாணவியை தாய் கண்னெதிரிலேயே, அதுவும் ஒரே ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே ஆட்டோவை  மறித்து, இளைஞர்கள் 2 பேர் கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில், தகவல் கிடைத்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக மாணவியைக் கடத்திச் சென்றவர்கள் போலீசார் மடக்கிப் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கொடி வளசை காலனியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சியாமளா (24). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு தற்போது வீட்டில் உள்ளார். இந்நிலையில் நேற்று சியாமளாவை அழைத்துக் கொண்டு தாய் மஞ்சுளா ஆட்டோவில் பள்ளிப்பட்டு பகுதியில் பஜார் தெருவுக்கு சென்றார். அங்குள்ள நகைகடை ஒன்றில் புதிதாக கொலுசு வாங்கி விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். 

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

அப்போது முனுசாமி நாயுடு கண்டிகை பகுதியில் திடீரென காரில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினார்கள். ஆட்டோவில் இருந்த தாய் மஞ்சுளாவை வெளியே இழுத்து தள்ளி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சியாமளாவை காரில் கடத்தி மின்னல் வேகத்தில் மறைந்தனர். தன் மகள் கண்ணெதிரில் கடத்தப்பட்டதை கண்ட தாய் மஞ்சுளா கூச்சல் போடவே பொதுமக்கள் திரண்டனர். 

இது தொடர்பாக பள்ளிப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் காரை பின் தொடர்ந்து விரட்டினர். ஆந்திரா மாநிலம் சர்க்கரை ஆலை அருகே ஆந்திரா போலீசாரின் உதவியோடு பொதுமக்களும் இணைந்து காரை மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட சியாமளாவை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

திருவள்ளூர்

இது தொடர்பாக நடந்த விசாரணையில் கொடி வலசா கிராமம் அருகிலுள்ள அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (30). அதே பகுதியைச் சேர்ந்த விஜய் (27) ஆகிய இருவரும் சியாமளாவை கடத்தியது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் சியாமளாவுக்கு உறவினர்கள் ஆவர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பது தெரியவில்லை.  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நடந்த இந்த கடத்தலில் ஒரு மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web