பகீர் வீடியோ... ராகிங் கொடுமை.. மாணவியை மிரட்டி முத்தமிட்ட மாணவன்!

சட்டங்கள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் நாம் அதை மதிப்பதில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. நாவரசு என்கிற மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின்பு தான் ராகிங் செய்வதற்கு எதிராக அரசு விழித்துக் கொண்டு சட்டமியற்றி, கடுமையான தண்டனைகளை விதித்தது. ஆனாலும், நாடு முழுவதுமே ராகிங் பிரச்சனைகள் ஓயவில்லை. ஒடிசா மாநிலத்தில் கல்லூரியின் மாணவி ஒருவரை மாணவன் ராக்கிங் செய்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த ராகிங் வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ என கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் போது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
In Binayak acharya college campus what's going sir @SP_BERHAMPUR
— lord (@lordvinx_1) November 16, 2022
In simple word it's called ragging
But ragging have one level
They cross the level
One guy beat to one and force to him for intimate in front of all
Humble request sir take action aganaist culprit. pic.twitter.com/rttXdWUmRx
இதை சுற்றிலும் நின்று மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த ராகிங் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் ராகிங் செய்த அந்த மாணவன் ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹத் என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த மாணவனை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த மாணவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது போலிசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த மாணவருக்கு உடந்தையாக இருந்த மற்ற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அவர்களையும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கல்லூரிக்கு சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!