பகீர் வீடியோ! பிச்சை கேட்பது போல் வந்து முன்னாள் எம்.பி.யை வெட்டி கொல்ல முயன்ற மர்ம ஆசாமி!

 
ஆந்திரா

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான போல்னாட்டி சேஷகிரி ராவை, சாமியார்போல வேடமிட்டு வந்த ஆசாமி அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாமியார் வேடமிட்ட ஒருவர், பிச்சை கேட்பதைப்போன்று நடித்து, கத்தியால் வெட்ட முயற்சிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்  சேஷகிரி ராவ்   வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு சாமியார் வேடமிட்ட ஒருவர் பிச்சை கேட்பதைப் போன்று   வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே வந்த சேஷகிரி ராவ், அந்த சாமியார் வேடமிட்டவருக்கு யாசகம் வழங்கியுள்ளார். அப்போது, அந்த மர்ம ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேஷகிரி ராவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

போலீஸ்

அவரின் அலரல் சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தினர் தலையிலும், கழுத்திலும் பலத்த காயமடைந்த சேஷகிரி ராவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  மருத்துவமனையில் சேஷகிரி ராவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தலைமறைவாகிவிட்ட அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கொண்டு விசாரணை நடைபெறுவதாகவும் போலிசார் கூறுகின்றனர்.   இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web