சென்னையில் பகீர் சம்பவம்…தவறான சிகிச்சையால் காலை இழந்த இளைஞர்...

 
தவறான சிகிச்சை

 

சென்னை வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்திய சாலையில் இளைஞர் ஒருவருக்கு அளித்த தவறான சிகிச்சையால் அவரின் காலை   அகற்றப்பட்ட அதிர்ச்சிகர  சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் விஜய். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் பார்க்கில் தனது குழந்தையை விளையாட அழைத்து சென்றபோது, தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விஜயை அழைத்து சென்றநிலையில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கட்டுப்போட வேண்டும் என அங்கு கூறியுள்ளனர்.  பின்னர் நண்பரின் மூலமாக வடபழனியில் உள்ள புத்தூர் கட்டு வைத்தியசாலைக்கு சென்ற விஜய்க்கு,  கட்டுப்போடப்பட்டுள்ளது.

சிகிச்சை

 

தொடர்ந்து காலில் ரத்தம் கசிந்ததால், அச்சமடைந்த விஜய் இதுகுறித்து வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம்  தெரிவித்துள்ளார். அதற்கு அவர், அட்மிட் ஆகி சிகிச்சை பெறுமாறு தெரிவித்துள்ளார்.இதனிடையே, ஒரு மாதத்திற்கு மேலாகியும்    விஜயின் எழும்பு முறிவு குணமடையாமல் இருந்துள்ளது. இதனால், செய்வதறியாத அவரின் குடும்பத்தினர் அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயின் கால் அழுகிய நிலையில் இருப்பதாகவும்  உடனே காலை   அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இளைஞர்

இதனையடுத்து விஜயின் காலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இந்த நிலையில் புத்தூர்கட்டு வைத்தியச்சாலையின் தவறான சிகிச்சையால் தான் தனது கணவர் விஜய்யின் கால் பறிபோனதாக கூறி அவரது மனைவி வேளாங்கண்ணி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேளாங்கண்ணி, தவறான சிகிச்சையால் தனது கணவரின் கால் பறிபோகி இருப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகி இருப்பதாகவும்     தவறான சிகிச்சை அளித்த வைத்தியசாலையின் உரிமையாளர் சிவசாமி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

From around the web