பகீர்… பட்டபகலில் பெட்ரோல் குண்டு வீசி, ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் வெட்டிக் கொலை!

 
ஊராட்சி மன்ற தலைவர்

தமிழகத்தில் சமீபமாக அரசியல் கொலைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது பெட்ரோல் குண்டு வீசி, கத்தி, வீச்சரிவாளால் நடுரோட்டில் வெட்டி கொலைச் செய்து விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர், சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு  வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார்.

வெங்கடேசன்

இந்நிலையில் இவர் மாடம்பாக்கம் அருகே ஆதனூர் பகுதியில் தனது நண்பர் சத்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் சென்ற போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை கத்தி, வீச்சுஅரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி வீட்டது.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்த போலிசார் கொலை கும்பலை தேடி வருகின்றனர். மேலும் இந்த படுகொலை   முன்விரோதம் காரணமாக நடந்ததா?  என பல்வேறு கோணங்களில் மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக மாடம்பாக்கம் ஊராட்சியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு   போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web