ஸ்ரீமதி வழக்கில் ஆசிரியர் , நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு!! அதிரடி உத்தரவு!!!

 
ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. 

ஸ்ரீமதி

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 309 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

ஸ்ரீமதி

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி, 5 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துள்ளார். 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web