கனல் கண்ணனுக்கு ஜாமீன்! கடும் நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
கனல் கண்ணன்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு கடுமையான நிபந்தைகளுடன் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. நான்கு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி, கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்களை சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்தது.

அந்த வகையில், இந்து முண்ணனியின் கலை மற்றும் பண்பாடு பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் கனல் கண்ணன், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என கூறியிருந்தார்.

கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இவரது பேச்சு இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதால் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் ஆகஸ்ட் 15-ம் தேதி புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

கனல் கண்ணன்

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கனல் கண்ணன் ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் குறித்து ஏன் பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இரு வேளையும் ஆஜராகிக் கையெடுத்திட வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web