ஓ.பி.எஸ் ஆதரவாளரிடம் 50 லட்சம் பணத்தை சுருட்டி கொண்டு ஓடிய பலே ஓட்டுநர் கைது!!

ஓ.பி.எஸ்  ஆதரவாளரிடம்  50  லட்சம்  பணத்தை  திருடிச்சென்று  தலைமறைவாகி  இருந்த  கார்  ஒட்டுநர்  கைது.

 
ஓட்டுநர் கைது

தேனி மாவட்டம்  பெரியகுளத்தை  சேர்ந்தவர்  நாராயணன்.  இவர்  ஓ.பி.எஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர். மேலும் தேனி மாவட்ட அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரிடம் கார் ஒட்டுநராக  தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த  ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  இவர் இவரிடம் பல வருடங்களாக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் தனது ஓட்டுநனை நம்பி பல இடங்களுக்கு தனியாக செல்வதும், பல லட்சங்களை அவரிடம் கொடுத்து அனுப்பி  பணிகளை மேற்கொள்வதும் இவரின் வழக்கம்.  இந்நிலையில் உசிலம்பட்டியில் இருந்து நாராயணன் மற்றும் ஸ்ரீதர் காரில் வந்துள்ளனர்.  அப்போது  ஆண்டிபட்டியில் நாராயணன் தனது காரை விட்டு இறங்கி வேறு காரில் மற்றோறு  பணிக்காக சென்றுள்ளார்.

அப்போது தனது ஒட்டுநர் ஸ்ரீதரிடம் காரில் 50 லட்சம் பணம் உள்ளது என்றும் இதனை  தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி விட்டு  சென்றுள்ளார். அப்போது பணத்தின் மீது ஆசை கொண்ட  ஸ்ரீதர் காரை மட்டும்  நாராயணன் வீட்டில் விட்டுவிட்டு பணத்துடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.  பின்னர்  வீடு திரும்பிய நாராயணன்  ஓட்டுநர் பணத்துடன் தலைமறைவானதை  அறித்து அதிர்ச்சியடைந்து , இது குறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்  தலைமறைவான ஓட்டுனர்  ஸ்ரீதரை தென்காசி பகுதியில் இருந்து காவல்துறையினர் கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் கொண்டுவந்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 50 லட்ச ரூபாயில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டும் அவரிடம் இருந்ததாகவும் மீதமுள்ள 47.50 இலட்சம் ரூபாய் அவருடைய உறவினரிடம் கொடுத்து வைத்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுவரை அவரிடம் இருந்து 15 லட்ச ரூபாய் வரை பணம் கைப்பற்றியதாகவும் மேலும் அவர் பல வீடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக விசாரணையில் கூறியதை அடுத்து அவர் எந்தெந்த வீடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

From around the web