அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை!! தமிழக அரசு அதிரடி!!

 
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலை செய்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதை தடுக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை

மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸை  பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த நிரந்தரமாக தடை விதித்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசிபேட் , மோனோகிரோடோபோஸ் , குளோரோபைரிபோஸ் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

From around the web